/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்பாக்கத்தில் வீடு கட்டுமான பணி வசதி குறித்து கேட்டறிந்த திட்ட இயக்குனர்

ADDED : ஆக 02, 2024 02:32 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
தக்கோலம் கூட்டு சாலை முதல், தணிகை போளூர் வரையில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், ராணிப்பேட்டை மாவட்டம், மேல்பாக்கம் இருளர் குடியிருப்பு ஓட்டி பை-பாஸ் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு, மாற்று இடம் கொடுத்து, வீடுகள் கட்டிக் கொடுக்கும் கட்டுமான பணிகள் மற்றும் அவர்களுக்கு செய்து கொடுத்த பிற வசதிகள் குறித்து, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தலைமை பொறியாளர் ஜெபசெல்வின் கிளாட்சன், கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்டப்பொறியாளர் லஷ்மிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.