/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சட்டசபை மதிப்பீட்டுக் குழுவிடம் பொதுமக்கள் மனு அளிக்கலாம்
/
சட்டசபை மதிப்பீட்டுக் குழுவிடம் பொதுமக்கள் மனு அளிக்கலாம்
சட்டசபை மதிப்பீட்டுக் குழுவிடம் பொதுமக்கள் மனு அளிக்கலாம்
சட்டசபை மதிப்பீட்டுக் குழுவிடம் பொதுமக்கள் மனு அளிக்கலாம்
ADDED : செப் 11, 2024 08:20 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டசபை மதிப்பீட்டு குழு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்கிறது.
குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், 18 உறுப்பினர்கள் வர இருப்பதால், தங்குமிடம், உணவு, உதவி அலுவலர்கள் என சகல வசதிகளை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணி, நேரு மார்க்கெட் கட்டட பணிகள், அன்னை அஞ்சுக திருமண மண்டப பணி என பல்வேறு கட்டுமான பணிகளை இக்குழு பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளது.
மதியம் 3:00 மணியளவில், அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட ஆய்வு கூட்டமும் நடக்க உள்ளது. கூட்டத்தின்போது, பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் குழுவிடம் மனு அளிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.