/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் படர்ந்து வளரும் சீமைக்கருவேல மரங்கள்
/
சாலையில் படர்ந்து வளரும் சீமைக்கருவேல மரங்கள்
ADDED : செப் 01, 2024 01:47 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் இருந்து, புதுப்பாக்கம்வழியாக, பெரியகரும்பூர்பகுதிக்கு செல்லும்,5 கி.மீ., துாரம், நெடுஞ்சாலை துறை கட்டுப் பாட்டில், சாலை உள்ளது.
இச்சாலையில், எட்டிற்கு மேற்பட்ட இடங்களில், அபாயகரமான வளைவுகள் உள்ளன. மேலும், ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில், சிறு பாலங்கள் கடந்து செல்கின்றன. சாலை ஓரம் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கிறது.
குறிப்பாக, சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும்அளவிற்கு, சீமைக்கருவேல மரங்கள் இடையூறாக வளர்ந்துள்ளன.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, கோவிந்தவாடி- - பெரியகரும்பூர் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.