/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவிலுக்கு சொந்தமான மரங்கள் தனிநபர் வெட்டி விற்பனை
/
கோவிலுக்கு சொந்தமான மரங்கள் தனிநபர் வெட்டி விற்பனை
கோவிலுக்கு சொந்தமான மரங்கள் தனிநபர் வெட்டி விற்பனை
கோவிலுக்கு சொந்தமான மரங்கள் தனிநபர் வெட்டி விற்பனை
ADDED : மார் 23, 2024 01:02 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திம்மையன்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபாலன் ஆகிய கோவில்கள் உள்ளன.
இந்த கோவிலுக்கு சொந்தமான, 18 ஏக்கர் நிலத்தில் சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டி காணப்படுகின்றன. இதை தனி நபர் ஒருவர், வெட்டி விற்பனை செய்து வருகிறார்.
ஆனால், ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் வருவாய் துறையினர், கோவில் மரங்களை வெட்டுவதை தடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் இன்பசேகரன் கூறியதாவது:
கோவிலுக்கு சொந்தமான நில பட்டாவில், தனி நபர் பெயர் வருகிறது என, அவர் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறார்.
இதனால், கோவிலில் வேலை செய்யும் நபர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியவில்லை. இதை தடுக்க, அறநிலைய துறையினர் மற்றும் வருவாய் துறையினர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.

