/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வாக செல்லும் மின் கம்பியால் மேட்டு காந்துார் கிராமத்தினர் அச்சம்

ADDED : ஆக 04, 2024 01:26 AM

மதுரமங்கலம்:மதுரமங்கலம் அடுத்த காந்துார் கிராமத்தில் இருந்து, மேட்டு காந்துார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலையோரத்தில், மின்மாற்றிக்கு செல்லும் இணைப்பு மற்றும் தெரு விளக்கு மின் வழித்தடம் செல்கிறது.
இந்த மின் வழித்தடத்தில் செல்லும் மின் கம்பி, கைக்கு எட்டும் துாரத்தில் தாழ்வாக செல்கிறது. குறிப்பாக, சாலையோரத்தில் உயரமான லோடு வாகனம் சென்றால், மின் கம்பியின் மீது உராயும் அபாயம் உள்ளது.
மேலும், வைக்கோல் வாகனம் உள்ளிட்ட விவசாய வாகனங்கள் செல்லும் போது, தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, காந்துார்- - மேட்டு காந்துார் இடையே தாழ்வாக செல்லும் மின் வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.