/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளத்துார் குளத்திற்கு கற்கள் பதிக்கும் பணி அரைகுறை
/
வளத்துார் குளத்திற்கு கற்கள் பதிக்கும் பணி அரைகுறை
வளத்துார் குளத்திற்கு கற்கள் பதிக்கும் பணி அரைகுறை
வளத்துார் குளத்திற்கு கற்கள் பதிக்கும் பணி அரைகுறை
ADDED : செப் 07, 2024 10:57 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வளத்துார் கிராமத்தில், ஊராட்சி பொது குளம் உள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரை ஆடு, மாடுகள் குடிக்க நீராதாரமாகவும் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்த குளத்தை, 2019- -- 20ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 3.40 லட்ச ரூபாய் செலவில் குளத்தை சுற்றிலும் கற்கள் பதித்துள்ளனர்.
‛டானாவை' போல ஒரு பகுதியில் மட்டுமே, கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. குளத்தின் மேற்கு பகுதியில், கற்கள் பதிக்கவில்லை. இதனால், சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன. மேலும், தண்ணீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, புதர் மண்டிக் கிடக்கும் குளத்தை துார்வாரி, மற்றொரு பகுதியில் கற்களை பதித்து, சிமென்ட் பூச்சு பூச வேண்டும் என, வளத்துார் மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.