ADDED : ஜூன் 14, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த வயலக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
கடந்த 12ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, இளம் பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி, மாகரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
l உத்திரமேரூர் ஒன்றியம், அரசாணிமங்கலம் அடுத்த, குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப், 30. இவர், உத்திரமேரூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 12ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, ஜோசப் மனைவி சிவரஞ்சனி அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.