
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா, 55. நேற்று முன்தினம், இவரது மகன், மருமகள் ஆகியோர், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதனால், வீட்டில் தனியாக இருப்பதற்கு அச்சப்பட்ட மல்லிகா, அருகில் உள்ள தன் சகோதரி வீட்டில், நேற்று இரவு உறங்கச் சென்றுள்ளார்.
பின், நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மருவத்துார் போலீசார், திருடு போன வீட்டில் ஆய்வு செய்தனர்.
வீட்டின் உரிமையாளர் வந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னரே, திருடு போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு தெரிய வரும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.