/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு
/
மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு
ADDED : ஜூன் 13, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை,:படப்பை அடுத்த ஆதனுார் ஆர்.கே.எஸ்., அவென்யூ பகுதியில் வசிப்பவர் நாராயணசாமி, 45; கட்டட மேஸ்திரி.
உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, குடும்பத்துடன் விழுப்புரம் சென்றார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
அக்கம்பக்கத்தினர் தகவலையடுத்து, நாராயணசாமி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 சவரன் தங்க நகை, 200 கிராம் வெள்ளி, 25,000 ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
நாராயணசாமி புகாரை, மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.