/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தெப்ப உத்சவம்
/
திருக்கச்சி நம்பிகள் கோவிலில் தெப்ப உத்சவம்
ADDED : மார் 11, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகளின் அவதார தலமான வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருக்கச்சி நம்பிகளின் அவதார உத்சவ விழா, பிப்., 26 ல் துவங்கி, மார்ச் 7ல் நிறைவுற்றது.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் தெப்ப திருவிழா துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், முதல் நாள் ரங்கநாதப் பெருமாளுடனும், 2ம் நாளான நேற்று சீனிவாசப் பெருமாளுடனும், மூன்றாம் நாளான இன்று வரதராஜபெருமாளுடன் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருளி, குளத்தை சுற்றி வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.