/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபாலம் அமைத்ததில் குளறுபடி குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம்
/
சிறுபாலம் அமைத்ததில் குளறுபடி குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம்
சிறுபாலம் அமைத்ததில் குளறுபடி குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம்
சிறுபாலம் அமைத்ததில் குளறுபடி குடியிருப்புகளுக்கு வெள்ள அபாயம்
ADDED : செப் 07, 2024 10:59 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் 2021 - 22ம் நிதியாண்டில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு பாலம் கட்டப்பட்டது. மழைக்காலங்களின் போது, வெள்ளநீர் சாலையை கடந்து பாலத்தின் கீழ் செல்ல வேண்டும்.
இந்த நிலையில், பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும் மழைநீர் செல்ல கால்வாய் உள்ள நிலையில், எதிர் திசையில் கால்வாய் இல்லை. இதனால், சிறுபாலத்தில் ஒருபுறத்தில் இருந்து வரும் மழைநீர் மறுபுறத்தில் வெளியேர முடியாத நிலை உள்ளது.
இதானால், அப்பகுதியில் வெள்ளநீர் குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்வரும் பருவ மழைக்குகள் விடுபட்ட மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளர்.