/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீரமாகாளி அம்மனுக்கு ஆடிப்பெருக்கு திருமஞ்சனம்
/
வீரமாகாளி அம்மனுக்கு ஆடிப்பெருக்கு திருமஞ்சனம்
ADDED : ஆக 04, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் வீரமாகாளி அம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி நேற்று, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
இதில், அம்மனுக்கு பல்வேறு பழ வகைகள், விபூதி, சந்தனம், ஜவ்வாது, பால், தேன், இளநீர், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து மஞ்சள் அலங்காரத்தில் மாதுளை கனி பதித்த அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மஹாதீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும், தொடர்ந்து பரதாலயா நாட்டிய பள்ளி, பாண்டியன் சண்முகம் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னபிரசாதமும் வழங்கப்பட்டன.