ADDED : மே 15, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தைச் சேர்ந்தவர் லீனா. இவரது சகோதரர், ராணிப்பேட்டை மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் நேற்று முன்தினம், புரிசை கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு சென்று உள்ளார்.
அங்கு, ஏற்பட்ட தகராறில், புரிசை கிராமத்தைச் சேர்ந்த கேசவன், 40. மற்றும் அவரது மகன்கள் ரஞ்சித், 21. மற்றும் 17 வயது சிறுவன் என, மூவரும், வேலாயுதத்தை தாக்கியுள்ளனர். தடுக்க சென்று அவரது மனைவி நிர்மலாவையும் தாக்கி உள்ளனர்.
இதில், வேலாயுதம் காயமடைந்து உள்ளார். இதுகுறித்து, வேலாயுதம் மனைவி நிர்மலா, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில், அளித்த புகாரின்kih, மேற்கண்ட மூவரை கைது செய்தனர்.