/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மறைமலை நகரில் நடந்த படுகொலை சடலத்தை ஓசூரில் வீசிய மூவர் கைது
/
மறைமலை நகரில் நடந்த படுகொலை சடலத்தை ஓசூரில் வீசிய மூவர் கைது
மறைமலை நகரில் நடந்த படுகொலை சடலத்தை ஓசூரில் வீசிய மூவர் கைது
மறைமலை நகரில் நடந்த படுகொலை சடலத்தை ஓசூரில் வீசிய மூவர் கைது
ADDED : மார் 11, 2025 12:34 AM
மறைமலை நகர், கர்நாடக மாநிலம், ஓசூர் வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவ., 20ம் தேதி ஆண் சடலம் கிடந்ததை ஓசூர் போலீசார் கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜா, 32, என்பதும், தாம்பரத்தில் தங்கி நெய் வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
அழகுராஜாவுக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து முருகேசனை, ஓசூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அழகுராஜாவுடன் இருந்த முன் விரோதத்தால், அவரை திட்டமிட்டு மறைமலைநகர் அருகில் உள்ள தென்மேல்பாக்கம் வனப்பகுதியில் வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை மறைமலைநகர் போலீசாரிடம் ஓசூர் போலீசார் ஒப்படைத்தனர்.
மறைமலைநகர் போலீசார் கூறியதாவது:
சிவகங்கையில், முருகேசனின் அப்பா, அம்மாவை, கடந்த 2011ம் ஆண்டு அழகுராஜா வெட்டியுள்ளார். அதன்பின் தாம்பரத்தில் தங்கி, நெய் வியாபரம் செய்து வந்து உள்ளார்.
அவரை கடந்த நவ., மாதம் முருகேசனின் நண்பர் ஜெய் ஆகாஷ் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு நெய் வேண்டும் எனக்கூறி, அழகுராஜாவை தென்மேல்பாக்கம் வனப்பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்து உள்ளனர்.
பின், உடலை இண்டிகா காரில் எடுத்துச் சென்று ஓசூரில் வீசி சென்று உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கார்நாடகாவில் தலைமறைவாக இருந்த ஜெய் ஆகாஷ், 24, சதிஷ்குமார், 27. சூர்யா, 25 ஆகிய மூவரையும் மறைமலைநகர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.