நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்பதுார் அருகே, கிவளூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, நேற்று முன்தினம் இரவு, கீவளூர் அம்பேத்கர் தெருவில் உள்ள லோகேஸ்வரி, 35, என்பவரின் வீட்டில், போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அங்கு சட்டவிரோத விற்பனைக்காக வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
லோகஸ்வரியை கைது செய்து விசாரித்ததில், அவருக்கு டாஸ்மாக்கில் இருந்து மதுபாட்டில் வாங்கி தர உதவிய, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 37 மற்றும் காட்ராம்பாக்கத்தைச் சேர்ந்த முருகேசன், 34, என்பது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 27 மதுபாட்டில் பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைத்தனர்.