/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயின் குறுக்கே சிறுபாலம் திருக்காலிமேடினர் வலியுறுத்தல்
/
கால்வாயின் குறுக்கே சிறுபாலம் திருக்காலிமேடினர் வலியுறுத்தல்
கால்வாயின் குறுக்கே சிறுபாலம் திருக்காலிமேடினர் வலியுறுத்தல்
கால்வாயின் குறுக்கே சிறுபாலம் திருக்காலிமேடினர் வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2024 04:11 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு, திருக்காலிமேடு குறுக்கு கவரை தெருவிற்கும், சக்ரபாணி தெருவிற்கும் இடையே வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் செல்கிறது. இரு தெருவையும் இணைக்கும் இப்பகுதியில் கால்வாயின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்படாமல், சிமென்ட் சிலாப் போடப்பட்டுள்ளது.
இதனால், ஆட்டோ மற்றும் அதிக எடை கொண்ட இருசக்கர வாகனங்கள் செல்லும்போது சிமென்ட் சிலாப் உடைந்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சக்ரபாணி தெருவிற்கும், குறுக்கு கவரை தெருவிற்கும் இடையே செல்லும் கழிவுநீர் கால்வாய் மீது சிறுபாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.