/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்கூரை வசதி இல்லாத திருப்புட்குழி பஸ் நிறுத்தம்
/
நிழற்கூரை வசதி இல்லாத திருப்புட்குழி பஸ் நிறுத்தம்
நிழற்கூரை வசதி இல்லாத திருப்புட்குழி பஸ் நிறுத்தம்
நிழற்கூரை வசதி இல்லாத திருப்புட்குழி பஸ் நிறுத்தம்
ADDED : ஜூலை 06, 2024 12:19 AM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையை ஒட்டி, திருப்புட்குழி ஊராட்சி உள்ளது. இங்கு, 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு வருவோர் மற்றும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் திருப்புட்குழி பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்கின்றனர்.
இந்த பைபாஸ் சாலையின் இருபுறமும், பயணியர் நிழற்கூரை வசதி இல்லை. இதனால், பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருப்புட்குழி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.