/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திரிசூலக்காளியம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா
/
திரிசூலக்காளியம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா
திரிசூலக்காளியம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா
திரிசூலக்காளியம்மன் கோவிலில் இன்று தீமிதி திருவிழா
ADDED : ஜூலை 21, 2024 06:14 AM

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் திரிசூலக்காளியம்மன் கோவிலில், 40ம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி இன்று, காலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், 7:30 மணிக்கு உலக நன்மைக்காக யாக வேள்வியும், 8:30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 9:30 மணிக்கு அன்னதானம், 11:00 மணிக்கு வேப்பம் சீலை சார்த்தலும் நடைபெற உள்ளது.
மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், 1:00 மணிக்கு அன்னதானம், 2:30 மணியளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
இரவு 7:00 மணிக்கு அன்னதானமும், 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற உள்ளது.
இதில், திருப்புலிவனம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சுற்றியுள்ள பக்தர்கள், காப்பு கட்டி விரதமிருந்து தீமிதிக்க உள்ளனர்.
விழாவுக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகி காளிதாஸ், கோவில் அறங்காவலர்கள், சண்முகசுந்தரம், பாலமுருகன் ஆகியோர் செய்துள்ளனர்.