/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல்
/
சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 03, 2024 04:49 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் உள்ள புஞ்சையரசந்தாங்கல், அய்யங்கார்குளம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் வசிப்போருக்கு சமீப நாட்களாக குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், திடீரென காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், காலி குடங்களுடன் அப்பகுதி பெண்கள் நேற்று காலை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வாகனங்களும், காஞ்சிபுரம் நோக்கி வந்த வாகனங்களும் செல்ல முடியாமல், சாலையிலேயே அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தன.
போராட்டம் நடந்த இடத்திலிருந்து, 2 கி.மீ., துாரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள், பயணியர் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டனர்.
தகவலறிந்த காஞ்சி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டம் நடத்திய பெண்களிடம் சமாதானம் செய்தபின், போராட்டம் கைவிடப்பட்டது. அதையடுத்து போக்குவரத்து சீரானது.