/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை அமைப்பு
/
போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை அமைப்பு
போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை அமைப்பு
போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை அமைப்பு
ADDED : மார் 07, 2025 12:39 AM

உத்திரமேரூர்:புக்கத்துறையில் இருந்து, உத்திரமேரூர் வழியாக மானாம்பதி கூட்டுச்சாலை வரை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இருவழிச் சாலையாக இருந்த இந்த சாலையில் போதிய இடவசதி இல்லாததால், நீண்ட நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவ்வப்போது விபத்துகளும் நடந்து வந்தன.
இரண்டு ஆண்டுக்கு முன், முதல் கட்டமாக புக்கத்துறை முதல், நடராஜபுரம் வரையிலும், மீனாட்சி கல்லூரி முதல், வேடப்பாளையம் வரை, 54 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கப் பணி துவக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்தபின், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலை நகர் ஆகிய இடங்களில் இருந்து, தொழிற்சாலை வாகனங்களும், கனரக வாகனங்களும் தினமும் சென்று வருகின்றன.
மேலும், சாலையின் நடுவே மீடியன் அமைக்கப்பட்டு, இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, நெடுஞ்சாலையோரத்தில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த, வேடபாளையம் பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, உத்திரமேரூர், நெல்வாய் கூட்டுசாலை, புக்கத்துறை ஆகிய இடங்களிலும் நெடுஞ்சாலையோரத்தில் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.