/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி
/
வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி
ADDED : ஜூன் 28, 2024 10:39 PM
காஞ்சிபுரம்:கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்த ஊத்துக்காடு மற்றும் கிதிரிப்பேட்டை ஆகிய கிராமங்களில், கிராம அளவில் வேளாண் முன்னேற்ற குழுவினர் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
இந்த முகாமில், வாலாஜாபாத் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிரபாகரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
காரிப்பருவத்திற்கு ஏற்ற பயிர் மற்றும் ரகம் தேர்வு, விதை முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. முதல்வரின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில், 50 சதவீதத்தில் தக்கப்பூண்டு மானியம் வழங்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்டன.