/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் ஒயர்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்
/
மின் ஒயர்கள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள்
ADDED : ஆக 27, 2024 12:50 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம் நல்ல தண்ணீர்குளம் உள்ளது. இக்குளத்தங் கரையில், விநாயகர் கோவிலை யொட்டி உள்ள அரசமரம் அருகே மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மின்கம்பத்தில் இருந்து, மற்ற பகுதிகளுக்கு மின் ஒயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த மின் ஒயர்கள் மீது அங்குள்ள அரச மரத்தின் கிளைகள்படர்ந்து காணப்படுகின்றன.
மரக்கிளைகளை மின் ஒயர்கள் தாங்கி இருப்பதால், காற்று, மழை நேரங்களில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இப்பகுதியில் மின் ஒயர்கள் மீது படர்ந்துள்ள அரச மரக்கிளைகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.