/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
/
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஆக 04, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செவிலிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் திருவேங்கடம் தலைமை வகித்தார்.
இதில், பசுமை ஆர்வலர் பசுமை மேகநாதன், தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- - மாணவியர் ஒருங்கிணைந்து, பள்ளி வளாகத்தில் சரக்கொன்றை, புங்கன், வேம்பு, இலுப்பை, பூவரசு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர்.