ADDED : மே 09, 2026 09:53 PM
செங்கல்பட்டு, மே 10-–
செங்கல்பட்டு குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார், 39. இவர் செங்கல்பட்டு அரசு கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 6ம் தேதி இரவு செங்கல்பட்டு ராட்டினம் கிணறு அருகில் சுகுமாரன் நடந்து வந்த போது அவரை, வழிமறித்த மர்ம நபர் ஒருவர் சுகுமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். பின் அங்கிருந்தோர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விசாரித்த செங்கல்பட்டு நகர போலீசார், சம்பவத்தன்று சுகுமார் திருக்கழுக்குன்றத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு பேருந்தில் வந்தார் அப்போது திருமணி பகுதியை சேர்ந்த ரகுநாத், 34.வேண்பாக்கத்தைச் சேர்ந்த ஷாஜகான், 40 ஆகியோர் சுகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் இருந்து இறங்கியபோது, அவரை பின் தொடர்ந்து வந்து, கத்தியால் குத்தி தப்பியது தெரியவந்தது. போலீசார் கொலை முயற்சி வழக்கில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
