ADDED : ஆக 08, 2024 12:37 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 60. இவர், கால்நடைகள் பராமரிப்பு மற்றும் கால்நடை விற்பனை தொழில் செய்து வருகிறார்.
இவர், கடந்த 5ம் தேதி, தன் வெள்ளாடுகளை வயல்வெளிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று அன்று மாலை வழக்கம் போல வீட்டு கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் அதிகாலையில் சென்று பார்த்தபோது, கொட்டகையில் இருந்த 16 ஆடுகள் காணாமல் போனதை கண்டார்.
இதுகுறித்து உத்திரமேரூர் காவல் நிலையத்தில் மணி புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே காணாமல் போன மணிக்கு சொந்தமான ஆடுகள், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஆட்டு சந்தையில் விற்பனைக்கு உள்ளதாக உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்ற போலீசார், ஆடுகளை மீட்டதோடு அவைகளை திருடியவர்கள் குறித்து விசாரித்தனர்.
விசாரணையில், அனகாபுத்தூரைச் சேர்ந்த ஜெயகுமார், 24, மற்றும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 28, என ஆகிய இருவர் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இருவரையும் கைது செய்த போலீசார், உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.