ADDED : மே 15, 2024 11:50 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சரண்யா, 30; இவரது கணவர் ராஜ்மோகன். கத்தார் நாட்டில் வேலை செய்து வரும் நிலையில், சரண்யா நான்கு வயது மகன் தீரனுடன் தங்கி, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த மாதம் வெளிநாட்டில் இருந்து வந்த ராஜ்குமார், ஏப், 5ம் தேதி மீண்டும் திரும்பி செல்லும் போது, தான் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின் மற்றும் 4 மோதிரங்களை மனைவியிடம் கொடுத்துள்ளார்.
அதை வாங்கி, பிரோவில் வைத்து சரண்யா, நான்கு நாட்களுக்கு பின், பிரோவை திறந்து பார்த்த போது, செயின் மற்றம் மோதிரம் காணாமல் போனது தெரிந்தது.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், 20, மொய்தீன் அப்துல் காதர், 23 ஆகிய இருவரை கைது செய்தனர்.