/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளசரவாக்கம் மருத்துவமனையில் இரண்டு போலி டாக்டர்கள் சிக்கினர்
/
வளசரவாக்கம் மருத்துவமனையில் இரண்டு போலி டாக்டர்கள் சிக்கினர்
வளசரவாக்கம் மருத்துவமனையில் இரண்டு போலி டாக்டர்கள் சிக்கினர்
வளசரவாக்கம் மருத்துவமனையில் இரண்டு போலி டாக்டர்கள் சிக்கினர்
ADDED : ஆக 01, 2024 01:23 AM

சென்னை:சென்னை, வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலையில், 'தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி' என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு 12 மருத்துவர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு மருத்துவர்களாக பணி செய்த அகஸ்டின் மற்றும் பரதன் ஆகிய இருவரது சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது.
அவர்களின் தகவலை அடுத்து, வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
அகஸ்டினிடம் நடத்திய விசாரணையில், அவர் 2003ல் ரஷ்யாவில் மருத்துவம் பயின்றதாகவும், ஆனால் தொடர்ந்து இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்காக பதிவு செய்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்ததும் தெரியவந்தது.
மேலும், மருத்துவமனையில் போலி சான்றிதழ் அளித்து, இரண்டு ஆண்டுகள் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மருத்துவமனையில், பரதன் என்பவர் சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இவர், 2014 வரை சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை, சித்த மருத்துவ ஆணையத்தில் பெற்றிருந்தார். அதன் பின் அனுமதியை புதுப்பிக்காமல், அலோபதி சிகிச்சையும் அளித்து வந்துள்ளார்.
விசாரணையில் இந்த விபரங்கள் தெரியவந்ததை அடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார்.
இரு போலி மருத்துவர்கள் குறித்து
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சரவணனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், இருவரும் அளித்த சான்றுகள் போலி என தனக்கு தெரியாது என, விளக்கம் அளித்துள்ளார். அவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
'உரிமையாளர் தவறு செய்திருந்தால், மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும்' என, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.