/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உலக ' பென்டத்லான் ' போட்டி காஞ்சி மாணவியர் இருவர் தேர்வு
/
உலக ' பென்டத்லான் ' போட்டி காஞ்சி மாணவியர் இருவர் தேர்வு
உலக ' பென்டத்லான் ' போட்டி காஞ்சி மாணவியர் இருவர் தேர்வு
உலக ' பென்டத்லான் ' போட்டி காஞ்சி மாணவியர் இருவர் தேர்வு
ADDED : செப் 04, 2024 12:54 AM

காஞ்சிபுரம்:உத்தரகண்ட் மாநிலம், காஷிப்பூரில் தேசிய மார்டன் பென்டத்லான் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், பென்டத்லான் எனப்படும், ஓட்டம், நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
இப்போட்டியில் தமிழகம், மஹாராஷ்டிரா, ஹரியானா, பீஹார், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆபியா, 7, பங்கேற்று, இரண்டு தங்கப்பதக்கம் வென்றார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெய்னிகா, 14, ஒரு வெண்கல பதக்கம் வென்றார்.
இருவரும், வரும் அக்., மாதம் எகிப்து நாட்டில் நடக்கவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக, பயிற்சியாளர் ஆனந்த் தெரிவித்தார்.