/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வீராங்கனையர் இருவர் ஆசிய 'கிக் பாக்சிங்'கில் தேர்வு
/
காஞ்சி வீராங்கனையர் இருவர் ஆசிய 'கிக் பாக்சிங்'கில் தேர்வு
காஞ்சி வீராங்கனையர் இருவர் ஆசிய 'கிக் பாக்சிங்'கில் தேர்வு
காஞ்சி வீராங்கனையர் இருவர் ஆசிய 'கிக் பாக்சிங்'கில் தேர்வு
ADDED : ஆக 02, 2024 07:14 AM

காஞ்சிபுரம் : தேசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி, கோவா மாநிலம் மபுசா நகரில், ஜூலை 24 -- 28 வரை நடந்தது.
இதில் 18 வயதுக்கு மேலான சீனியர் பிரிவினருக்கான பாயின்ட் பைட்டிங், லைட் கான்டாக்ட், கிக் லைட், லோ கிக், புல் கான்டாக்ட் பாம்ஸ் உட்பட பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழகம் உட்பட 27 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், 66 வீரர்கள் பங்கேற்றனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த இரு வீராங்கனையர் உட்பட நான்கு வீரர்கள் தேர்வாகினர்.
இதில், நீனா 3 தங்கப்பதக்கமும், ரோஷிணி 2 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கமும், சத்யா மற்றும் விக்டர் ஆகியோர் தலா ஒரு வெண்கலம் என, மொத்தம் 5 தங்கம், 3 வெண்கலப் பதக்கம் வென்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனையர் நீனா, ரோஷினி ஆகியோர், அக்., மாதம் கம்போடியா நாட்டில் நடக்கும் ஆசிய கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக, அவர்களின் பயிற்சியாளர் கணேஷ், செயலர் அருண் ஆகியோர்தெரிவித்தனர்.