/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
/
குட்டையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
ADDED : ஆக 24, 2024 09:40 PM
நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, புன்னை காலனி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் தினேஷ், 11. சுப்ரியா, 10. ரஞ்சித், 7, ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
நேற்று, மதியம் 2:00 மணி அளவில் அப்பகுதியில் இருக்கும் குட்டையில், மூவரும் குளிக்க சென்றுள்ளனர். இதில், தினேஷ், சுப்ரியா ஆகிய இருவரும் நீரில் மூழ்கி விட்டனர்.
இதுகுறித்து, ரஞ்சித் தன் தந்தையிடம், அக்காவும், அண்ணனும் நீரில் மூழ்கிவிட்டதாக தெரிவித்து உள்ளான். அக்கம் பக்கத்தினர் குட்டையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தினேஷ், சுப்பிரியாவிற்கு நீச்சல் தெரியாதததால், இருவரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். நெமிலி போலீசார், இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

