/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலியல் தொழிலில் ஈடுபட்ட இருவர் கைது
/
பாலியல் தொழிலில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : மார் 06, 2025 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:வரதராஜபுரம், ராயப்பா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில், பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலையடுத்து, மணிமங்கலம் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
இதில், 15 வயது சிறுமி மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுகந்தாடை, 26, சுஷாந்த் ஷாஷா, 24, என்பது தெரிந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த, 15 வயது சிறுமியை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையோர் குறித்து, போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.