தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விசாரணை கைதிகள் இருவர் விடுதலை

விசாரணை கைதிகள் இருவர் விடுதலை

விசாரணை கைதிகள் இருவர் விடுதலை


ADDED : ஏப் 30, 2024 09:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 09:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரீனா ஜாய்ஸ்மேரி, 42; வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம், 55.

இவர்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, காஞ்சிபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார், 2016ல், ஸ்ரீபெரும்புதுாரில் கைது செய்தனர்.

மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்ததாக இருவர் மீதும் புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து, வேலுார் சிறையில், இருவரும் விசாரணை கைதிகளாக இருந்தனர். இருவர் மீதும், காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில், கியூ பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற விசாரணை முடிந்த நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், நீண்ட நாட்கள் விசாரணை கைதிகளாக சிறையிலேயே இருந்ததால், இருவரையும் விடுதலை செய்து, நீதிபதி செம்மல் நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us