/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டூ-வீலர்கள் மோதல் கொத்தனார் உயிரிழப்பு
/
டூ-வீலர்கள் மோதல் கொத்தனார் உயிரிழப்பு
ADDED : ஜூன் 21, 2024 09:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 55; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் கம்மவார்பாளையம் கிராமத்தில் இருந்து, சாமந்திபுரம் நோக்கி, தன் 'ஹீரோ' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பரந்துாரில்இருந்து கம்மவார் பாளையம் நோக்கிச் சென்ற 'ஹோண்டா' இருசக்கர வாகனம், நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகன ஓட்டி தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.