ADDED : மே 29, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அங்காள அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 46; இவர், கடந்த 21ம் தேதி, இரவு 7:35 மணிக்கு, காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்கு, 'ஹோண்டா ஷைன்' டூ - வீலரில் சென்றுஉள்ளார்.
கடைக்கு வெளியே டூ - வீலரை நிறுத்திவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, காணவில்லை.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒருவர் டூ - வீலரை திருடிச் செல்வது தெரியவந்தது.
சிவகாஞ்சி போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தியதில், காமாட்சியம்மன் சன்னிதி தெருவைச் சேர்ந்த கணேஷ்,40, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.