sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கட்டட பணியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இருவர் உயிரிழப்பு

/

கட்டட பணியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இருவர் உயிரிழப்பு

கட்டட பணியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இருவர் உயிரிழப்பு

கட்டட பணியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இருவர் உயிரிழப்பு


ADDED : மே 16, 2024 11:54 PM

Google News

ADDED : மே 16, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி, 49; கொத்தனார். படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் தங்கி, கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டார்.

நேற்று, ஒரத்துார் சிவன் கோவில் தெருவில், கட்டடத்தின் உள்ளே பூச்சு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பலகையில் கட்டப்பட்டிருந்த மின் விளக்கு கீழே விழுந்தது. இதை கவனக்குறைவாக எடுத்தபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜோதி உயிரிழந்தார்.

மணிமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஜோதி உடலை மீட்டு, பிரத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த், 19. சிட்லப்பாக்கம், காந்தி தெருவில் பெற்றோருடன் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று காலை, தாம்பரம் சானடோரியத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஜல்லி போடும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக, மோட்டாருக்கு செல்லும் வடத்தை மிதித்த ஆனந்த், மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.

சக ஊழியர்கள், மின்சாரத்தை துண்டித்து, ஆனந்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us