/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருசக்கர வாகனங்கள் மோதல் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
/
இருசக்கர வாகனங்கள் மோதல் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
இருசக்கர வாகனங்கள் மோதல் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
இருசக்கர வாகனங்கள் மோதல் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
ADDED : ஏப் 04, 2024 11:53 PM

சென்னை:சென்னை கொருக்குப்பேட்டை, காமராஜர் நகரை சேர்ந்தவர் விவேக், 19. மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்தார். இதே பகுதியை சேர்ந்தவர் அபிஷேக், 18. தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார்.
நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஒரே பைக்கில், திருவான்மியூர் நடைபெற்ற நண்பரின் பிறந்த நாளை விழாவை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டனர். அபிேஷக் பைக் ஓட்ட, விவேக் பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.
ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக பைக்கில் சென்ற போது, அதே வழியாக, எண்ணுார், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த ரமேஷ், 24 என்பவரும் பைக்கில் வந்தார். இரு பைக்குகளும் உரசின. இதில், அபிஷேக் சென்ற பைக் தடுமாறி விழுந்தது. பைக்கில் வந்த இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் பெருக்கெடுத்து கிடந்தனர். இந்த விபத்தில் ரமேஷ் என்பவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து மூவரையும் பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், விவேக் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.ரமேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

