/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு மத்திய வேளாண் அமைச்சர் உறுதி
/
ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு மத்திய வேளாண் அமைச்சர் உறுதி
ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு மத்திய வேளாண் அமைச்சர் உறுதி
ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு மத்திய வேளாண் அமைச்சர் உறுதி
ADDED : ஜூலை 08, 2024 05:40 AM
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த முட்டுக்காட்டில், மத்தியஉவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இங்கு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மீன் தீவனம் தயாரிக்கும் இடம், நண்டு வளர்ப்பு, இறால் மற்றும் மீன் குஞ்சு பொரிப்பகங்கள், ஆராய்ச்சி மையங்களை ஆய்வு செய்தார்.
மத்திய அமைச்சர், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடி, மீன் வளர்ப்பு முறைகள் மற்றும் மீன் வளர்ப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:
கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாக இருந்தால், இறுதி வரை மோசமான சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதில்லை.
லட்சக்கணக்கான நம் சகோதர -- சகோதரியர் தொடர்ந்து புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதையும், அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஏழைகளின் நலனைக் காப்பதற்கே முன்னுரிமை என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சாமானியர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள், போதிய உணவு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்தையும் வழங்க வேண்டும்.
மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. 43,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதிக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், நம் ஏற்றுமதி, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை எட்ட வேண்டும். அதேபோல், ஆராய்ச்சியாளர்கள் மீன் வளர்ப்பில் தங்கள் பணியைத் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.