/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தகரத்தில் ஆரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வலியுறுத்தல்
/
புத்தகரத்தில் ஆரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வலியுறுத்தல்
புத்தகரத்தில் ஆரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வலியுறுத்தல்
புத்தகரத்தில் ஆரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : பிப் 27, 2025 08:48 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இக்கிராமத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். புத்தகரத்தை சுற்றி, மருதம், பெய்க்குப்பம் கரூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையம், 10 கி.மீ., துாரத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் உள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு, அய்யம்பேட்டை சுகாதார நிலையத்திற்கு உடனடியாக செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால், மருத்துவ சிகிச்சைக்கு அப்பகுதியினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
புத்தகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியினர், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 10 கி.மீ., துரரம் சென்றுவர வேண்டியதாக உள்ளது.
இதனால், குறிப்பாக கர்ப்பிணியர் மருத்துவ பரிசோதனைக்கு உடனுக்குடன் செல்ல இயலாத நிலை உள்ளது.
எனவே, புத்தகரம் கிராமத்தில் இயங்கும் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதாரமாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.