/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சர்வதீர்த்தம் - முசவராக்கம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
/
சர்வதீர்த்தம் - முசவராக்கம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
சர்வதீர்த்தம் - முசவராக்கம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
சர்வதீர்த்தம் - முசவராக்கம் சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்
ADDED : மார் 05, 2025 01:15 AM

முசரவாக்கம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் - முசரவாக்கம் சாலையில் உள்ள பாக்குபேட்டை, சிறுகாவேரிபாக்கம், கீழம்பி உள்ளிட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இங்குள்ள ஆலைகளுக்கு லாரிகள் வாயிலாக நெல் மூட்டையாக எடுத்து வரப்பட்டு, பின், அரிசி மூட்டைகளாக பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கனரக வாகன வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையின் அகலம் குறைவாக உள்ளதால், இரண்டு லாரிகள், எதிரெதிரே செல்லும்போது, சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால், சாலையோரம் உள்ள பள்ளங்களில் வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஒரு சில நேரங்களில் பள்ளத்தில் சிக்கும் லாரிகளால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, அகலம் குறைவாக உள்ள சர்வதீர்த்தம் - முசரவாக்கம் சாலையின் அகலத்தை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.