ADDED : ஜூன் 26, 2024 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 1.69 லட்சம் கால்நடைகளுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 5வது சுற்று கோமாரி தடுப்பூசி செலுத்துவதற்கு, அத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
இந்த தடுப்பூசி போடும் பணி, ஜூன்- 10ம் தேதி துவங்கி, 21 நாட்கள் வரையில் நடந்து வருகிறது.
அதன்படி, கோவிந்தவாடி குறு வட்டத்தைச் சேர்ந்த கம்மவார்பாளையம் கால்நடை மருத்துவமனையின் கால்நடை மருத்துவர் லட்சுமிபதி தலைமையில், கால்நடைத்துறையினர் பசு, எருமை ஆகிய கால்நடைகளுக்கு, கோமாரி தடுப்பூசி செலுத்தினர்.