/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகன நிறுத்தமாக மாறிய வல்லம் சர்வீஸ் சாலை
/
வாகன நிறுத்தமாக மாறிய வல்லம் சர்வீஸ் சாலை
ADDED : ஜூலை 05, 2024 12:19 AM

ஸ்ரீபெரும்புதுார்:திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், ஒரகடம், மாத்துார், வல்லக்கோட்டை, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சர்வீஸ் சாலையையொட்டி ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளுக்கு வருவோர், தங்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை, சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர்.
இதனால், சர்வீஸ் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
காலை மற்றும் மாலை பீக் ஹவர் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, சர்வீஸ் சாலையில் வாகனங்களை நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.