/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற வல்லம்கண்டிகை சாலை
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற வல்லம்கண்டிகை சாலை
ADDED : செப் 04, 2024 11:38 PM

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம்கண்டிகை வழியே, வல்லம் வடகால் சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
தவிர, மேட்டுப்பாளையம், பண்ருட்டி பகுதிவாசிகள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
இந்த நிலையில், இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதானல், இவ்வாழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் இவ்வாழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பல்லாங்குழி சாலையில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சேதமான வல்லம்கண்டிகை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.