/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பின்றி வல்லம்கண்டிகை குளக்கரை சாலை
/
தடுப்பின்றி வல்லம்கண்டிகை குளக்கரை சாலை
ADDED : ஆக 02, 2024 02:18 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்குட்பட்ட வல்லம்கண்டிகை குளக்கரை சாலை வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நாள்தோறும் இருசக்கர வாகனங்களில் சென்றுவரும் பிரதான சாலையாக உள்ளது.
இந்த நிலையில், அதிக வாகனங்கள் செல்லும் குளக்கரை சாலையில் தடுப்பு இல்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் ஏதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் குளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளக்கரை சாலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.