/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரதராஜ பெருமாள் கோவில் தேர் சீரமைப்பு பணி தீவிரம்
/
வரதராஜ பெருமாள் கோவில் தேர் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : மார் 07, 2025 12:50 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோத்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். பிரம்மோத்சவத்தின்போது, தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வருவார். இதில், ஏழாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம் நடைபெறும்.
இந்நிலையில், நடப்பாண்டு ஆண்டு வைகாசி பிரம்மோத்சவத்தையொட்டி, சுவாமி பவனி வரும் தேர், தேரோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளதா என, கடந்த வாரம் ஹிந்து சமய அறிநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதில், தேரின் சில பாகங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் நிர்வாகம் சார்பில், தேர் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
இதில், தேரில் பழுதடைந்த பாகங்களும், சேதமடைந்த உதிரிபாகங்கள் புதிதாக மாற்றப்பட்டு, தேரோட்டத்தின்போது, தடையின்றி செல்லும் வகையில், சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தேர் சீரமைக்கும் பணி, 20 நாட்களில் நிறைவு பெறும் என, கோவில் தரப்பினர் தெரிவித்தனர்.