/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்

ADDED : மார் 02, 2025 12:22 AM

காஞ்சிபுரம், சென்னை - பெங்களூரு இடையே, ஆறுவழிச்சாலை விரிவுபடுத்தும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.
இந்த சாலை வழியாக,பெங்களூரு, ஒசூர், வேலுார் ஆகிய பகுதி களில் இருந்து, சென்னை நோக்கி செல்லும்வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வேலுார், பெங்களூரு, ஒசூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வெள்ளைகேட் மேம்பாலம் வழியாக கடந்து செல்கின்றன.
வெள்ளைகேட் மேம்பாலம் அருகே, தனியார் உணவகம் மற்றும் டீ கடைகளுக்கு, லாரி மற்றும் விரைவுப் பேருந்துகள் பிரதான சாலை ஓரம் நிறுத்திவிட்டு, டீ மற்றும் உணவு சாப்பிட செல்கின்றனர். இந்த சாலையில் செல்லும்வாகனங்கள் சர்வீஸ் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்வதில்லை.
இதனால், பெங்களூரு, மைசூரு, ஒசூர், வேலுார்ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், வெள்ளை கேட் மேம்பாலம்அருகே விபத்தில் சிக்கும்அபாயம் ஏற்பட்டுஉள்ளது.
எனவே, சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள்நிறுத்துவதை தவிர்க்கசம்பந்தப்பட்ட துறையினர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.