/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளியூர் ஏரிக்கரை சாலை சேதம் மின்கம்பங்களால் விபத்து அபாயம்
/
வேளியூர் ஏரிக்கரை சாலை சேதம் மின்கம்பங்களால் விபத்து அபாயம்
வேளியூர் ஏரிக்கரை சாலை சேதம் மின்கம்பங்களால் விபத்து அபாயம்
வேளியூர் ஏரிக்கரை சாலை சேதம் மின்கம்பங்களால் விபத்து அபாயம்
ADDED : மே 31, 2024 03:40 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த வேளியூர் ஊராட்சியில் இருந்து, வேளியூர் காலனி வழியாக, 2 கி.மீ., துாரம் புத்தேரி கிராமத்திற்கு செல்லும் ஏரிக்கரை சாலை உள்ளது.
இச்சாலை வழியாக புத்தேரி, வேளியூர் ஆகிய கிராமங்களில், நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த ஏரிக்கரை சிமென்ட் சாலை சேதமடைந்துள்ளது. மேலும், ஏரிக்கரையோரம் இருக்கும் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
இதனால், இவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வேளியூர் ஏரிக்கரை சிமென்ட் சாலையை சீரமைத்து, சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.