/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் வரும் 6ல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
காஞ்சிபுரத்தில் வரும் 6ல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரத்தில் வரும் 6ல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரத்தில் வரும் 6ல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 02, 2024 10:25 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமராஜர் வீதி, இரட்டை மண்டபம் அருகில், இஷ்டசித்தி விநாயகர் கோவில் மற்றும் அருளாளர் ராமலிங்க சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 2011ல் நடந்தது.
இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, 1 லட்சத்து 43,000 ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகளுடன் இரு கோவில்களும் புதுப்பிக்கப்பட்டன.
கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவையும், 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு அங்குரார்பணம், ரஷாபந்தனம், யாகசாலை உள்ளிட்டவையும் நடக்கின்றன.
வரும் 6ம் தேதி, காலை 6:15 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், காலை 6:40 மணிக்கு விநாயகர் சன்னிதி கும்பாபிஷேகமும், காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகமும் நடக்கிறது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், கோவில் பணியாளர்கள், பக்தர்கள், திருப்பணி உபயதாரர்கள் உள்ளிட்டோர் இணைந்து செய்து வருகின்றனர்.