/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் 60வது ஆண்டு நிறைவு விழா
/
விஸ்வ ஹிந்து பரிஷத் 60வது ஆண்டு நிறைவு விழா
ADDED : செப் 02, 2024 05:41 AM
காஞ்சிபுரம்: விஸ்வ ஹிந்து பரிஷத் 60வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, காஞ்சிபுரம் நாயகன்பேட்டை அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது.
இதில், பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர். விநாயகர், காமாட்சியம்மன், துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி, மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர்.
விழாவின் மற்றொரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், உத்திரமேரூர் அடுத்த, வெங்கச்சேரியில் பொதுக்கூட்டம் நடந்தது. வெங்கச்சேரி ஊராட்சி தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இதில், வடதமிழக மாநில அமைப்பு செயலர் ராமன், மாநில மக்கள் தொடர்பு அலுவலர் ஆன்லைன் பிரபாகர், மாநில இணை செயலர் வாலாஜா ராஜா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
காஞ்சிபுரம் மாவட்ட துர்கா வாகினி அமைப்பாளர் கார்குழலி நன்றி கூறினார்.