/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெயிலில் வாடும் மரங்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்
/
வெயிலில் வாடும் மரங்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்
வெயிலில் வாடும் மரங்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்
வெயிலில் வாடும் மரங்களை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்
ADDED : மே 04, 2024 11:17 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் கீழ்கதிர்பூரில் இருந்து மேட்டுகுப்பம் செல்லும் சாலையோரம் தன்னார்வலர்கள் வாயிலாக நடப்பட்ட மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து வந்தன.
தற்போது, காஞ்சிபுரத்தில் சில நாட்களாக 43 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் கொளுத்தி வருவதால், மரக்கன்றுகள் தண்ணீர் இல்லாமல் வாடிய நிலையில் உள்ளது. இதேநிலை நீடித்தால் மரக்கன்றுகள் வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் கருகி வீணாகும் சூழல் உள்ளது.
இதையடுத்து, வெயிலில் வாடும் மரங்களை பாதுகாக்கும் வகையில், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பினர், டேங்கர் வாகனம் வாயிலாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன் கூறியதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்க, காஞ்சிபுரத்தில் வெயிலில் வாடும் மரங்களுக்கு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால், வாகனம் வாயிலாக தண்ணீர் எடுத்துச் சென்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் கீழ்கதிர்பூரில் இருந்து மேட்டுகுப்பம் வரை சாலையோரம் உள்ள மரங்களுக்கு முறையாக தண்ணீர் ஊற்ற எங்களிடம் பொருளாதார வசதிஇல்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் டேங்கர் வாகன வசதி ஏற்படுத்தி உதவி செய்தால், வெயிலில் வாடும் மரங்களுக்கு முறையாக தண்ணீர் ஊற்றி பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.