/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு தீவிரம்
/
85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு தீவிரம்
85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு தீவிரம்
85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டளிக்க ஏற்பாடு தீவிரம்
ADDED : மார் 22, 2024 10:28 PM

காஞ்சிபுரம்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது. இத்தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்டோர் தபால் ஓட்டளிக்கலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் 85 வயதிற்கு மேற்பட்டோர், 14,270 பேர் உள்ளனர்.
இதில், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் மட்டும், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 3,082 பேர் உள்ளனர்.
இந்த வாக்காளர்கள் வரும் லோக்சபா தேர்தலில்தபால் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல்ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, தபால் ஓட்டளிப்பதற்கான விண்ணப்பங்களில் கையெழுத்து பெற்றுவருகின்றனர்.
இதில், முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும், மாநகராட்சி தேர்தல் ஊழியர்கள், விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து, கையெழுத்து பெறும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.